Site icon ழகரம்

நயினார் நாகேந்திரன் கருத்துக்கு அண்ணாமலை வருத்தம்…!

அரியலூர் மாணவி தற்கொலை வழக்கில் நீதி வேண்டி பாஜக சார்பில் நேற்று வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை, பொன். ராதாகிருஷ்ணன், எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் 300க்கும் மேற்பட்ட பாஜகவினர் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

இதில் பாஜக எம்.எல்.ஏ நயினார் நகேந்திரன் தமிழ்நாட்டில் அதிமுக எதிர்க்கட்சி போல செயல்படவில்லை. பாஜக எதிர்க்கட்சியாக இல்லை என்றாலும் கூட துணிந்து கேள்வி எழுப்புகிறது. சட்டமன்றத்தில் ஆண்மையோடு பேச அதிமுகவில் ஒரு எம்எல்ஏ கூட இல்லை. அதிமுக மக்கள் பிரச்சனையை சட்டமன்றத்தில் எப்போதுமே பேசுவதில்லை என்று தெரிவித்து இருந்தார்.

நயினார் நகேந்திரனின் கருத்துக்கு அதிமுக தலைவர்கள்,. நிர்வாகிகள் என பலர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நயினார் நகேந்திரனின் கருத்து தொடர்பாக எடப்பாடி பழனிசாமியிடம் தொடர்பு கொண்டு வருத்தம் தெரிவித்ததாக கூறினார்.

 

Exit mobile version