செய்திகள்அரசியல்

ஏரிகள்  மீட்சி சோழர்கால ஆட்சி பிரச்சார எழுச்சி நடைபயணம் நிறைவு செய்தார் அன்புமணி ராமதாஸ்…!!

ஏரிகள்  மீட்சி சோழர்கால ஆட்சி பிரச்சார எழுச்சி நடைபயணம் நிறைவு செய்தார் அன்புமணி ராமதாஸ்…!!

ஏரிகள்  மீட்சி சோழர்கால ஆட்சி என்ற கொள்கை முழக்கத்துடன் அரியலூர் – சோழர் பாசன திட்டங்களை செயல்படுத்த வலியுறுத்தி பா.ம.க தலைவர் மருத்துவ அன்புமணி இராமதாஸ் பிரச்சார எழுச்சி நடைபயணம் 29ஆம் தேதி தொடங்கினார்.ஏரிகள்  மீட்சி சோழர்கால ஆட்சி

  • கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டில் தொடங்கி 11&ஆம் நூற்றாண்டு வரை அரியலூர் மாவட்டத்தில் சோழ மன்னர்கள் ஏற்படுத்திய பாசனக் கட்டமைப்புகள் வியக்க வைக்கக்கூடியவை. மாவட்டத்தில் உள்ள அனைத்து பெரிய ஏரிகளுக்கும் ஆற்றிலிருந்தும், சிறிய ஏரிகளுக்கு பெரிய ஏரிகளில் இருந்தும் தண்ணீர் செல்வதற்கு நீர்ப்பாதைகள் அமைக்கப்பட்டிருந்தன. ஆனால், காலப்போக்கில் அவை முறையாக பராமரிக்கப் படவில்லை. வீராணம் ஏரியை விட பெரிய ஏரியான சோழகங்கம் ஏரி அதன் பரப்பளவில் பெரும்பகுதியை  ஆக்கிரமிப்பாளர்களிடம் இழந்து விட்டது.  பெரும் கொள்ளளவு கொண்ட ஏரிகள் தூர்வாரப்படவில்லை.ஏரிகள்  மீட்சி சோழர்கால ஆட்சி
  • அரியலூர் மாவட்டமே கொள்ளிடத்தின் கரையில் தான் அமைந்திருக்கிறது. கொள்ளிடம் ஆற்று நீரை முறையாக பயன்படுத்தியிருந்தால் அரியலூர் மாவட்டம் வளம் கொழிக்கும் பூமியாக மாறியிருக்கும். சோழர்கள் காலத்தில் அரியலூர் மாவட்டம் அவ்வாறு செழிப்பான பூமியாகத் தான் இருந்தது. ஆனால், இப்போதோ, அரியலூர் மாவட்ட மக்கள் பிழைப்பு தேடி பிற மாவட்டங்களுக்கு செல்லும் அவலம் நிலவுகிறது.
  • மிகவும் வலிமையான பாசனக் கட்டமைப்பைக் கொண்டுள்ள அரியலூர் மாவட்டம் வறட்சி மாவட்டமாகவே  நீடிப்பதை அனுமதிக்க முடியாது. சோழர் காலத்தில் அமைக்கப்பட்ட ஏரிகளுக்கு தண்ணீர் கொண்டு செல்லும் பாசனக் கால்வாய்களை அடையாளம் கண்டு மீட்டெடுத்தல், அனைத்து ஏரிகளையும் அவற்றின் முழுக் கொள்ளளவுக்கு தூர் வாருதல், கொள்ளிடம் மற்றும் மருதையாற்றில் தடுப்பணைகளை கட்டுதல்  உள்ளிட்ட சோழர் கால பாசனக் கட்டமைப்புகளை மீட்டெடுக்கும் திட்டத்தை தயாரித்து செயல்படுத்துவதன் அரியலூர் மாவட்டம் இழந்த வளத்தையும், செழிப்பையும் விரைவாக மீண்டும் வென்றெடுக்க முடியும்.ஏரிகள்  மீட்சி சோழர்கால ஆட்சி
  • சோழர் கால பாசனக் கட்டமைப்புகளை மீட்டெடுப்பதன் மூலம் அரியலூர் மாவட்டத்தில் வேளாண்மை தொழில் வெகு சிறப்பாக வளரும். மாவட்டத்தின் பல பகுதிகள் இயற்கை சுற்றுலா மையங்களாக மாறும். அதனால் வேலைவாய்ப்புகள் பெருகும். இதுவரை அரியலூர் மாவட்டத்தில் வேலை இல்லை என்று கூறி வெளியூருக்கு வாழ்வாதாரம் தேடிச் சென்றவர்கள், மீண்டும் சொந்த ஊருக்கு திரும்பி வளமாக வாழ முடியும். அரியலூர் மாவட்டத்தின் வளர்ச்சிக்கு இதை விட சிறந்த கனவுத்திட்டம் இருக்க முடியாது.
  • எனவே, அரியலூர் சோழர் பாசனத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி அரியலூர் மாவட்டத்தில் சோழ பாசனத் திட்டத்தை நடைமுறைப்படுத்தகோரி வாலாஜா நகரம், அஸ்தினாபுரம், வி.கைகாட்டி, தத்தனூர், உடையார்பாளையம், சூரிய மணல், கட்சி பெருமாள், ஜெயங்கொண்டம், ஆமணக்க தோண்டி (பொன்னேரி), கங்கைகொண்ட சோழபுரம், மீன்சுருட்டி, கண்டமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களை சந்தித்து விழிப்புணர்வை ஏற்படுத்தியதோடு, இறுதியாக காட்டுமன்னார்கோயிலில்  நிறைவு செய்தார் அன்புமணி ராமதாஸ்!ஏரிகள்  மீட்சி சோழர்கால ஆட்சி

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button