Site icon ழகரம்

பொங்கல் பரிசு தொகுப்பு ஊழலை மறைக்கவே தனது வீட்டில் லஞ்ச ஒழிப்பு சோதனை என கூறும் கே.பி.அன்பழகன்….!

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த புகாரில் தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் இல்லம் மற்றும் அவரது உறவினர்கள், நண்பர்கள் இல்லம், நிறுவனங்கள் என 57 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தினர்.

இரு வாகனங்களில் வந்த 8-க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் அதிகாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை சோதனை நடத்தினர்.

பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கியதில் 500 கோடி ஊழல் என எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டிய நிலையில், அதை மறைக்கவே தனது வீட்டில் லஞ்ச ஒழிப்பு சோதனை நடத்தியிருக்கின்றனர் எனவும் தனது வீட்டில் இருந்து எதுவும் கைப்பற்றப்பட வில்லை என்றும் முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் இதுகுறித்து கூறியுள்ளார்.

 

Exit mobile version