Site icon ழகரம்

கரூரில் சுயேட்சைகளை களமிறக்கிய திமுக…..!

கரூரில் கூட்டணி கட்சிகளுக்கு எதிராக திமுக சுயேட்சை வேட்பாளர்களை மறைமுகமாக நிறுத்தி இருப்பது கூட்டணி கட்சியினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதேபோல் திமுகவினர் ஆதரவு இல்லாததால் வெளியே இருந்து ஆட்களை வரவழைத்து காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து எம்பி. ஜோதிமணி பிரச்சாரம் மேற்கொண்டனர்.

கரூர் மாநகராட்சியில் உள்ள 48 வார்டுகளில், தி.மு.க., கூட்டணி கட்சிகளுக்கு, 7 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில், ம.திமு.க., இ.கம்யூ., கட்சிகள் போட்டியிலிருந்து விலகியதால், அந்த வார்டுகளில் தி.மு.க., வேட்பாளர்களை அறிவித்துள்ளது. இதற்கிடையே கூட்டணி கட்சிகளுக்கு எதிராக வேட்பாளர்களை களமிறங்கி, அவர்களுக்கும் திமுக அதிர்ச்சி அளித்து வருகிறது.

12-வது வார்ட்டில் காங்கிரஸ் கட்சியின் கிருத்திகாவுக்கு எதிராக, அந்த கட்சியின் முன்னாள் கவுன்சிலர் பெரியசாமி மனைவி மஞ்சுளா, 16வது வார்ட்டில் காங்கிரஸின் பெரியசாமிக்கு எதிராக, தி.மு.க., மாணவரணி தெற்கு நகர துணை அமைப்பாளர் பூபதி, 41வது வார்ட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தண்டபாணி எதிராக தி.மு.க.வை சேர்ந்த தங்கராஜ் ஆகியோர் சுயேச்சையாக போட்டியிடுகின்றனர்.

அந்த சுயேச்சைகள் பணிமனைகளில் உதயசூரியன் வெளிச்சத்தில் வளர்ந்த தென்னை மரத்திற்கு வாக்களியுங்கள் வாசகம் அடங்கிய பேனர் வைக்கப்பட்டுள்ளது.

கூட்டணி கட்சிகளுக்கு யார் போட்டியிட வேண்டும் என்று மாவட்ட தி.மு.க. நிர்பந்தம் செய்தால் பிரச்னை ஏற்பட்டு தி.மு.க., வி.சி.க., கூட்டணி உடைந்து, 11வது வார்டில் நேரடியாக மோதுகின்றன.

 

Exit mobile version