காதில் கடுக்கன், ஸ்டைலிஷ் கண்ணாடி என நடிகர் அஜித்தின் புதிய லுக், அவரின் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.
தனது புதிய படத்துக்காக இந்த லுக்கை அவர் பராமரித்து வருகிறார். இந்த மாத இறுதியில் ஹைதராபாத்தில் அதன் ஷூட்டிங் தொடங்கவுள்ள நிலையில், அஜித்தின் புதிய புகைப்படத்தில் அவரின் குடும்ப உறுப்பினர்கள் உள்ளனர்.
அஜித்தின் மகன் ஆத்விக்கின் பிறந்தநாள் நேற்று. இதேபோல் கடந்த மாதம் மகள் அனோஷ்காவின் பிறந்தநாள் முடிந்தது. அப்போது நிலவிய கொரோனா சூழலால் அதை எளிமையாக கொண்டாடிய அஜித் குடும்பம், ஆத்விக் பிறந்தநாளை பெங்களூருவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் சிறப்பாக கொண்டாடியுள்ளனர்.