Site icon ழகரம்

’ஏகே61’ படத்துக்காக எடையைக் குறைக்கும் அஜித்……!

‘ஏகே61’ படத்தில் நடிப்பதற்காக நடிகர் அஜித் தனது உடல் எடையைக் குறைக்கத் தொடங்கியுள்ளார் என்று தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

வலிமை படத்தை தொடர்ந்து அஜித்தின் அடுத்த படத்தையும் ஹெச்.வினோத் தான் இயக்கவுள்ளார். இதனையும் ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் போனி கபூர் இணைந்து தயாரிக்கவுள்ளார்கள். இதற்கு ஒளிப்பதிவாளராக நீரவ் ஷா, இசையமைப்பாளராக ஜிப்ரான் ஆகியோர் பணிபுரியவுள்ளனர்.

இந்தப் படத்தில் அஜித்தின் கெட்டப் என்று புகைப்படம் ஒன்றைப் படக்குழு வெளியிட்டது.ஒரு கேரக்டருக்காக சுமார் 25 கிலோ அளவு எடையை குறைக்க அஜித் தற்போது பயிற்சி மேற்கொண்டுவருகிறாராம். இதற்காக பயிற்சியாளர்கள் உதவியுடன் கடந்த சில நாட்களாக பயிற்சி மேற்கொண்டு வரும் அஜித் 10 கிலோ வரை தற்போது எடையை குறைத்துள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

 

Exit mobile version