தமிழகத்தில் மின் கட்டண உயர்வைக் கண்டித்து கோவில்பட்டியில் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
தமிழகத்தில் மின் கட்டண உயர்வைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அதிமுக அறிவித்திருந்தது. அதன்படி தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் கோவில்பட்டியில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
பயணியர் விடுதி முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு வடக்கு மாவட்ட அதிமுக செயலாளரும், அதிமுக அமைப்புச் செயலாளருமான கடம்பூர் செ.ராஜூ எம்.எல்.ஏ. தலைமை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில் மின்வெட்டு, மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, உள்ளிட்டவைகளைக் கண்டித்து கைகளில் அரிக்கன் விளக்கு ஏந்தி கோஷங்கள் முழங்கினர்.
இதில் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள் மோகன், சின்னப்பன், மாவட்ட ஊராட்சிக் குழு தலைவி சத்யா, அதிமுக பொதுக் குழு உறுப்பினர் ஆர். ராமச்சந்திரன், மாநில எம்ஜிஆர் இளைஞர் அணி துணைச் செயலாளர் சீனிராஜ், நகர்மன்ற உறுப்பினர்கள் கவியரசன், செண்பகமூர்த்தி, நகரச் செயலாளர் விஜய பாண்டியன் உட்பட ஒன்றிய, பேரூர் செயலாளர்கள், நிர்வாகிகள் உட்பட திரளானோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக தலையால் நடந்தான்குளம், கோவில்பட்டி பாரதி நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மாற்று கட்சியினர் கடம்பூர் செ.ராஜூ எம்எல்ஏ முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.