அதிமுக ஒன்றிய, நகர, பேரூராட்சி நிர்வாகிகள், பகுதிக் கழக பேரூராட்சி நிர்வாகிகள், பகுதிக் கழக நிர்வாகிகள் ஆகிய பொறுப்புகளுக்கான தேர்தல்கள் வரும் மார்ச் 27-ம் தேதி முதல்கட்டமாக 25 மாவட்டங்களுக்கு நடைபெறும் என்று அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக ஓபிஎஸ், இபிஎஸ் வெளியிட்டுள்ள கூட்டறிக்கை: அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலும், அதனைத் தொடர்ந்து, கிளைக் கழக நிர்வாகிகள், பேரூராட்சி வார்டு கழக நிர்வாகிகள், நகர வார்டு கழக நிர்வாகிகள், மாநகராட்சி வட்டக் கழக நிர்வாகிகள் தேர்தல்களும் நடந்து முடிந்துள்ளன. அவ்வாறு நடைபெற்ற தேர்தல்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிர்வாகிகளுக்கான நியமன ஆணைக் கடிதங்கள் தலைமைக் கழகத்தில் இருந்து அனுப்பப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் முதல்கட்டமாக, கீழ்க்கண்ட 25 மாவட்டங்களுக்கு உட்பட்ட மாவட்டங்களுக்கு உட்பட்ட ஒன்றியக் கழக நிர்வாகிகள், நகரக் கழக நிர்வாகிகள், ஒன்றியக் கழக நிர்வாகிகள், நகரக் கழக நிர்வாகிகள், நகரக் கழக நிர்வாகிகள், பேரூராட்சிக் கழக நிர்வாகிகள் பேரூராட்சிக் கழக நிர்வாகிகள் மற்றும் பகுதிக் கழக நிர்வாகிகள் ஆகிய பொறுப்புகளுக்கான கழக அமைப்புத் மற்றும் பகுதிக் கழக நிர்வாகிகள் ஆகிய பொறுப்புகளுக்கான கட்சியின் அமைப்புத் தேர்தல்கள் தேர்தல்கள் வருகின்ற 27.3.2022 – ஞாயிற்றுக் கிழமை காலை 10 மணிக்கு தொடங்கி நடைபெறும்.
முதல் கட்டத் முதல் கட்டத் தேர்தல் நடைபெறும் மாவட்டங்கள் தேர்தல் நடைபெறும் மாவட்டங்கள் ராணிப்பேட்டை, வேலூர் மாநகர், வேலூர் புறநகர், திருப்பத்தூர், திருவண்ணாமலை வடக்கு, திருவண்ணாமலை தெற்கு, விழுப்புரம் , கள்ளக்குறிச்சி, சேலம் புறநகர், சேலம் மாநகர், தருமபுரி, கிருஷ்ணகிரி கிழக்கு, கிருஷ்ணகிரி மேற்கு, நாமக்கல், ஈரோடு மாநகர், ஈரோடு புறநகர் கிழக்கு, ஈரோடு புறநகர் மேற்கு, திருப்பூர் மாநகர், திருப்பூர் புறநகர் கிழக்கு, திருப்பூர் புறநகர் மேற்கு, கரூர், கோவை மாநகர், கோவை புறநகர் வடக்கு, கோவை புறநகர் தெற்கு, நீலகிரி.
மேற்கண்ட மாவட்டங்களுக்கான தேர்தல்களை நடத்துவதற்காக, மாவட்ட தேர்தல் பொறுப்பாளர்கள் மற்றும் ஆணையாளர்கள் விவரங்களும் இத்துடன் வெளியிடப்படுகிறது. மாவட்டக் கழகச் செயலாளர்கள், தங்கள் மாவட்டத்தில் ஒன்றிய, நகர, பேரூராட்சி,பகுதிக் கழக நிர்வாகிகள் தேர்தல்களை நடத்துவதற்குத் தேவையான ரசீதுப் புத்தகம், விண்ணப்பப் படிவம், வெற்றிப் படிவம் முதலானவற்றை, தேர்தல் நடைபெறும் இரண்டு நாட்களுக்கு முன்பாகவே தலைமைக் கழகத்தில் இருந்து பெற்றுச் சென்று அவற்றை மாவட்டத் தேர்தல் பொறுப்பாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும்.
மாவட்டத் தேர்தல் பொறுப்பாளர்கள், தங்கள் மாவட்டத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ள தேர்தல் ஆணையாளர்களை, தேர்தல் நடைபெறும் நாளுக்கு முதல் நாளே நேரில் வரவழைத்து ஆலோசனைக் கூட்டத்தை நடத்த வேண்டும். இக்கூட்டத்தில், தேர்தலை எவ்வாறு நடத்த வேண்டும் என்பது குறித்து தெளிவாக விளக்கிச் சொல்லி, உரிய ஆலோசனைகளை வழங்க வேண்டும்; தலைமைக் கழகத்தில் இருந்து பெற்றுச் செல்லும் படிவங்களை தேர்தல் ஆணையாளர்களுக்கு பிரித்து வழங்கிட வேண்டும்.
அதேபோல், கட்சி அமைப்புத் தேர்தல்களை நடத்துவதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும், சம்பந்தப்பட்ட மாவட்டச் செயலாளர்கள் முழுமையாகச் செய்திட வேண்டும். மாவட்டத் தேர்தல் பொறுப்பாளர்கள் மேற்கண்ட வழிமுறைகளின்படி தேர்தல்களை நடத்தி முடித்து வெற்றிப் படிவத்தில், அறிவிக்கப்பட்டுள்ள தேர்தல் ஆணையாளர்களும், மாவட்டத் தேர்தல் பொறுப்பாளர்களும் கையொப்பம் இட்டு, வெற்றிப் படிவம், ரசீதுப் புத்தகம், விண்ணப்பக் கட்டணம் முதலானவற்றை தேர்தல் முடிவுற்ற மூன்று நாட்களுக்குள் மாவட்டத் தேர்தல் பொறுப்பாளர்கள் தலைமைக் கழகத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.
மேற்கண்ட அறிவிப்பிற்கிணங்க, கழக சட்ட திட்ட விதிமுறைகளின்படி, மூன்றாம் கட்டத்திற்கான (Phase – III), முதல் கட்ட கழக அமைப்புத் தேர்தல்கள் சுமூகமாக நடைபெறும் வகையில் சம்பந்தப்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த கட்சி நிர்வாகிகள் அனைவரும், மாவட்டத் தேர்தல் பொறுப்பாளர்களுக்கும், தேர்தல் ஆணையாளர்களுக்கும் முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும், இந்தத் தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கான விண்ணப்பக் கட்டண விவரங்களும், மாவட்ட வாரியான தேர்தல் பொறுப்பாளர்கள் மற்றும் தேர்தல் ஆணையாளர்களின் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.