Site icon ழகரம்

அ.தி.மு.க. வேட்பாளர் தமிழருவி திமுகவில் இணைவு…..!

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வருகிற 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இந்த நிலையில் அரசியல் கட்சிகள் தங்களது வேட்பாளர் பட்டியல், தொகுதிப் பங்கீடு ஆகிய பணிகளில் மும்முரம் காட்டி வருகிறது.

இந்த நிலையில் ஆம்பூர் நகராட்சி கவுன்சிலர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட அ.தி.மு.க. வேட்பாளர் தி.மு.க.வில் இணைந்துள்ளார். ஆம்பூர் 14-வது வார்டு வேட்பாளராக தமிழருவி என்பவரை நேற்று அ.தி.மு.க. அறிவித்தது.

நேற்று இரவு 11 மணியளவில் அ.தி.மு.க. வேட்பாளர் தமிழருவி தன்னை எதிர்த்து போட்டியிடும் தி.மு.க. 14-வது வார்டு வேட்பாளரும், நகர செயலாளருமான ஆறுமுகம் தலைமையில் தி.மு.க.வில் இணைந்தார்.

 

Exit mobile version