
தேசவிரோதி தீயசக்தி திருமாவளவனை உடனடியாக குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்! எச்.ராஜா!!
- தனித் தமிழ்நாட்டை வெட்டி எடுப்பது தான் தமிழ் தேசியத்தின் இறுதி இலக்கு என்று பேசியுள்ள தேசவிரோதி தீயசக்தி திருமாவளவனை உடனடியாக குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று எச்.ராஜா தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
- முன்னதாக, சென்னை அசோக் நகரில் உள்ள விசிக தலைமை அலுவலகத்தில் ‘திருமாவின் சிந்தனை கோட்பாடுகள்’ எனும் தலைப்பில் சென்னை அம்பேத்கர் சட்ட கல்லூரியை சேர்ந்த மாணவர் ஜெ.பாரத் என்பவர் எழுதியுள்ள நூல் வெளியீட்டு விழா நடைப்பெற்றது.
- அந்த விழாவில் பங்கேற்றுப் பேசிய திருமாவளவன் அவர்கள், ஆணவ கொலைகளை ஆதரிக்கிறவர்கள், சாதி தூய்மை வாதிகள் எனவும் தூய்மைவாதம் என்பது பழமைவாதம், சனாதனத்தின் ஒரு கூறு அது என விமசித்தார். தமிழ் தேசிய இயக்கத்தில் விசிகவின் பங்களிப்பு மகத்தானது, பெரிய கட்சிகள் செய்ய முடியாததை சாத்தியப்படுத்தியுள்ளது என கூறினார்.
- “தமிழ்நாடு எனும் தனி நாடு” அமைப்பதே தமிழ் தேசியத்தின் இறுதி இலக்காக இருக்க வேண்டும் என தெரிவித்த திருமாவளவன், இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திலும் மொழி வழி தேசியம் வளர்த்தெடுக்கப்பட்டு, அதன் ஒன்றியமாக தான் மத்திய அரசு இருக்க வேண்டும். மாநிலங்களின் ஒன்றியம் என்பதை விட தேசிய இனங்களின் ஒன்றியம் என இருக்க வேண்டும் என தெரிவித்தார்.
- இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதமாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் அவர்களை, தேச விரோதி தீய சக்தி திருமாவளவனை உடனடியாக குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று பாஜகவின் எச் ராஜா அவர்கள் தெரிவித்துள்ளார்.