Site icon ழகரம்

புதுக்கோட்டை கறம்பக்குடி பேரூராட்சியின் அதிமுக வேட்பாளருக்கு ஒரு ஓட்டு கூட விழவில்லை…..!

தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் என மொத்தம் 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் உள்ளன. இவற்றில் மொத்தம் 12,285 வார்டுகள் உள்ள நிலையில், உள்ளாட்சி பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கக் கடந்த 19-ம் தேதி தேர்தல் நடைபெற்றது.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், புதுக்கோட்டையில் ஒரு வார்டில் அதிமுக வேட்பாளர் ஒருவர் ஒரு வாக்கைக் கூடப் பெறவில்லை.

தற்போது வரை வெளியான தேர்தல் முடிவுகளில் பெரும்பாலான இடங்களில் திமுக கூட்டணியே முன்னிலையில் உள்ளது.

பொங்கல் பரிசு விவகாரம், நீட் விலக்கு ஆகியவை பிரச்சினைகளை முன்னிறுத்தி பிரசாரம் செய்த அதிமுக இந்த முறை கணிசமான இடங்களில் வெல்ல வேண்டும் என நினைத்தது. இருப்பினும், அதிமுக இந்த முறையும் மோசமான தோல்வியைச் சந்தித்துள்ளது.

இந்நிலையில், புதுக்கோட்டை கறம்பக்குடி பேரூராட்சி 7வது வார்டில் அதிமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் இம்ராம்ஷாவுக்கு ஒரு ஓட்டு கூட விழவில்லை. அதேபோல விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் நகராட்சி 1வது வார்டில் போட்டியிட்ட சுயேச்சை வேட்பாளர் மணிகண்டனும் ஒரு வாக்கு கூட வாங்கவில்லை.

Exit mobile version