Site icon ழகரம்

விவசாய துறை அமைச்சர் பதவி விலகல்

பீகார் விவசாய துறை அமைச்சராக இருந்த சுதாகர் சிங் நேற்று பதவி விலகினார்.அவர் பீகார் முதல்வர் நிதிஷ் குமார் மீது வாய்த்த குற்றச்சாட்டு  காரணமாக அவர் பதவி விலகியதாக கூறப்படுகிறது.மேலும்,பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் சென்ற ஆட்சியில் நடந்த தவறுகள் இந்த ஆட்சியில் நடைபெற கூடாது என்று கூறியுள்ளார்.

பீகார் அரசில் அமைச்சர் பதவியிலிருந்து விலகும் இரண்டாவது நபர் சுதாகர் சிங்.இதற்கு முன்னர் சட்ட துறை அமைச்சர் கார்த்திகேயா கடத்தல் வழக்கு காரணமாக பதவி விலகினார்.இரண்டு அமைச்சர்களும் ராஷ்ட்ரிய ஜனதா தல் கட்சியை சேர்ந்தவர்கள்.

தன்னுடைய விலகல் கடிதத்தை ராஷ்ட்ரிய ஜனதா தல் கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ் அவர்களிடம் கொடுத்ததாக கூறப்படுகிறது.அவர் முதல்வர் நிதிஷ் குமாரிடம் அனுப்பிய பிறகு,நடைமுறைப்படி முதல்வர் ஆளுனரிடம் அனுப்பி வைப்பார்.

Exit mobile version