Site icon ழகரம்

ஜெயம் ரவியின் ‘அகிலன்’ பர்ஸ்ட் லுக் வெளியீடு…!

ஜெயம் ரவி நடிக்கும் புதிய படத்துக்கு ‘அகிலன்’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது.

இயக்குநர் கல்யாண் இயக்கத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டது. இதில் ப்ரியா பவானி சங்கர் மற்றும் தான்யா ரவிச்சந்திரன் நாயகிகளாக நடித்து வருகின்றனர்.

ஸ்கிரீன் சீன் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவாளராக விவேக், இசையமைப்பாளராக சாம் சி.எஸ் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.

இந்நிலையில் இப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படத்துக்கு ‘அகிலன்’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது. இப்படத்தில் ஜெயம் ரவி மரைன் இன்ஜினியராக நடிக்கிறார்.

 

Exit mobile version