தமிழகத்தின் 5-வது யானைகள் காப்பகமாக அகத்தியமலை அறிவிக்கப்பட்டுள்ளது பெருமகிழ்ச்சி அளிப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் நேற்று வெளியிட்ட சமூகவலைதளப் பதிவில், “உலக யானைகள் தினத்தில், தமிழகத்தின் 5-வது யானைகள் காப்பகமாக திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அகத்தியமலை அறிவிக்கப்பட்டிருப்பது பெருமகிழ்ச்சி அளிக்கிறது. காணுயிர்ச் சூழலமைப்புகளின் சமநிலையைப் பேணுவதில் யானைகள் மிக முக்கியப் பங்காற்றுகின்றன. இயற்கையின் கொடையான இந்த மிடுக்குமிகு பாலூட்டிகளை எவ்விலை
கொடுத்தேனும் நாம் பாதுகாக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.