“சனி, கேது போன்ற வேண்டாத கிரகங்கள் விலகிச் சென்றுள்ளதால், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக வெற்றி பெறும்” என திருச்சியில் நடைபெற்ற அதிமுக வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பேசியுள்ளார்.
“நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புத் தேர்தலில் யாரும் நினைத்துப் பார்க்க முடியாத வெற்றியை அதிமுக பெறவுள்ளது. ஏனெனில், பொங்கல் பரிசுத் தொகுப்பு உட்பட பல்வேறு விவகாரங்களில் ஆளுங்கட்சியை அனைத்துத் தரப்பு மக்களும் விமர்சனம் செய்யும் நிலையில் தேர்தல் நடைபெறுகிறது என கூறியுள்ளார் .
இந்நிகழ்ச்சியில் அதிமுக திருச்சி புறநகர் வடக்கு மாவட்டச் செயலாளர் பரஞ்ஜோதி, முன்னாள் அமைச்சர்கள் கிருஷ்ணன், பாலசுப்பிரமணியன், வளர்மதி மற்றும் அதிமுக திருச்சி புறநகர் தெற்கு மாவட்டச் செயலாளர் குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.