Site icon ழகரம்

இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்ட பிறகு சேலம் வந்த பழனிசாமிக்கு அதிமுகவினர் வரவேற்பு

அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர், முதன் முறையாக சொந்த மாவட்டமான சேலத்துக்கு எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி நேற்று வந்தார். பல்வேறு இடங்களில் அவருக்கு கட்சியினர் வரவேற்பு அளித்தனர்.

அப்போது, எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி பேசியதாவது: அதிமுகவின் கிளைச் செயலாளராக இருந்த எனக்கு, இப்போது உங்கள் ஆதரவினால் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் என்ற உயர்ந்த பொறுப்பு கிடைத்துள்ளது.

தமிழகத்தில் மட்டுமல்லஇந்தியாவில் வேறு எந்த கட்சியிலும் தொண்டர்களுக்கு இந்த வாய்ப்பு கிடைக்காது என்றார். முன்னாள் அமைச்சர் செம்மலை உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Exit mobile version