துணை குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக கூட்டணி வேட்பாளர் ஜெகதீப் தன்கருக்கு அதிமுக ஆதரவு அளிக்கும் என்றும் ஓ.பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார்.
இந்திய துணை குடியரசு துணைத் தலைவர் தேர்தல் ஆகஸ்ட் 6 ஆம் தேதி நடக்க உள்ளது. இதில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளராக மேற்குவங்க ஆளுநராக இருக்கும் ஜெகதீப் தங்கர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் ஜெகதீப் தங்கருக்கு அதிமுக ஆதரவு அளிக்கும் என்று ஓபன்னீர் செல்வம் அறிவித்துள்ளார்.
இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்திய குடியரசுத் துணைத் தலைவர் பதவிக்கான தேர்தலில், பாரதிய ஜனதா கட்சியின் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளர் ஜக்தீப் தன்கர் அவர்களுக்கு அஇஅதிமுக தனது முழு ஆதரவினையும் நல்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.” இவ்வாறு அந்த பதிவில் கூறப்பட்டுள்ளது.