10 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆதார் அட்டையை புதுப்பிப்பது கட்டாயம்!! மத்திய அரசு உத்தரவு.
Editor Zhagaram
10 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆதார் விவரங்களை புதுப்பிப்பது கட்டாயம் என்று மத்திய அரசு புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது!
ஆதார் அட்டையை 10 ஆண்டுகளுக்கு முன்பு பெற்றவர்கள், உடனடியாக தங்களது வீட்டு முகவரி, பயோமெட்ரிக் தகவல்களைப் புதுப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது. தொடர்ந்து, மத்திய மின்னணு, தகவல் தொழில்நுட்பத் துறை ஆதார் விதிமுறைகளில் திருத்தம் செய்து புதிய அரசாணையை வெளியிட்டுள்ளது.
இதன்படி, 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆதார் பயோமெட்ரிக் தகவல்கள், விவரங்களைப் புதுப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. https://myaadhaar.uidai.gov.in/ இணையதளம் அல்லது அருகில் உள்ள ஆதார் மையங்களுக்குச் சென்று, தகவல்களைப் புதுப்பித்துக் கொள்ளலாம் என்று அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆதார் அட்டை மூலமாக நடைபெறும் மோசடிகளைத் தவிர்க்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்படுள்ளது. அது மட்டுமல்லாமல் நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் இனிமேல் பிறக்கும் குழந்தைகளுக்கு பிறப்புச் சான்றிதழுடன் சேர்ந்து, ஆதார் அட்டையும் வழங்கப்பட உள்ளது. இந்தத் திட்டம் அடுத்த சில மாதங்களில் அமலாகும் என்பது குறிப்பிடத்தக்கது.