Site icon ழகரம்

கீழடி 8ம் கட்ட அகழாய்வில் சுடுமண் செங்கற்களால் கட்டப்பட்ட சுவர் கண்டுபிடிப்பு

கீழடி 8ம் கட்ட அகழாய்வில் சுடுமண் செங்கற்களால் கட்டப்பட்ட சுவர் கண்டுபிக்கப்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடியில், 8ம் கட்ட அகழாய்வு பணி கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கீழடியில் குழி தோண்டும் போது 4அடி ஆழத்தில் சுமார் 2 அடி நீளம் கொண்ட சுடுமண் செங்கல் கட்டுமான சுவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த கட்டுமான சுவற்றை ஆய்வு செய்யும்பட்சத்தில் இதனுடைய நீட்சி அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக தொல்லியல் துறை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

கீழடி, அகரம், கொந்தகை‌‌ ஆகிய மூன்று இடங்களிலும் அகழ்வாராய்ச்சி பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

Exit mobile version