Site icon ழகரம்

அரசுப் பள்ளிகளில் காலை சிற்றுண்டி; அரசாணை வெளியீடு: 5 நாட்கள் மெனு விவரம்

1,545 அரசு தொடக்கப் பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது.

திமுக தலைமையிலான தமிழக அரசின் ஓராண்டு நிறைவையொட்டி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.

அதில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை நேரத்தில் சிற்றுண்டி வழங்கப்படும் என அறிவித்தார். மேலும், இதில் முதல்கட்டமாக மாநகராட்சி, நகராட்சி மற்றும் தொலைதூர கிராமங்களில் உள்ள பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு சிற்றுண்டி வழங்கப்படும் எனத் தெரிவித்தார்.

இதன்படி 1,545 அரசு தொடக்கப் பள்ளிகளில் காலைச் சிற்றுண்டி திட்டத்தை செயல்படுத்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த 1,545 பள்ளிகளில் பயிலும் 1,14,095 மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்படவுள்ளது. இந்த திட்டத்திற்கு ரூ.33.56 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த சிற்றுண்டி திட்டத்தில் வழங்கப்படும் உணவின் விவரம்:

Exit mobile version