சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்கள் 20 பேர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு. பெண் பக்தர் சாமி கும்பிட சென்றபோது சாதிப்பெயரை சொல்லி திட்டியாக அளித்த புகாரில் போலீஸ் நடவடிக்கை.
சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனகசபை மீது ஏறி சுவாமி தரிசனம் செய்ய சிதம்பரம் நகரத்தையொட்டியுள்ள பழைய புவனகிரி சாலையைச் சேர்ந்த ஜெயசீலா வந்துள்ளார்.
ஆனால் கனகசபை மீது ஏறி பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதி கிடையாது எனக் கூறி தீட்சிதர்களில் சிலர் ஜெயசீலாவை தடுத்து ஆபாசமாக பேசியும் சாதிரீதியாக திட்டி, தாக்கி வெளியே அனுப்பியதாக தீட்சிதர்கள் மீது ஜெயசீலா சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
தீட்சிதர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதால் சிதம்பரம் மட்டுமல்லாமல் உலகத்தில் உள்ள சிவ பக்தர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.