இந்திய எல்லைப் பகுதி கட்டமைப்பு தொடர்பாக மத்திய பாதுகாப்புத் துறை இணை அமைச்சர் அஜய் பட் மாநிலங்களவையில் கூறியதாவது:
கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்தியா – சீனா எல்லையில் 2,088 கிமீ நீளத்துக்கு சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு ஆன மொத்த செலவு ரூ.15,447 கோடி ஆகும். பாகிஸ்தான், வங்கதேசம், மியான்மர் ஆகிய இந்திய எல்லைப் பகுதிகளையும் உள்ளடக்கி கடந்த ஐந்து ஆண்டுகளில் மொத்தமாக 3,595 கிமீ நீளத்துக்கு சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு ஆன செலவு ரூ.20,767 கோடி. பாகிஸ்தான் எல்லையில் 1,337 கி.மீ., மியான்மர் எல்லையில் 151 கி.மீ., வங்கதேச எல்லையில் 19 கி.மீ. நீளத்துக்கும் சாலை அமைக்கப்பட்டுள்ளது என்றார்.