Site icon ழகரம்

தமிழக அரசு ஊழியர்களுக்கு 14% சதவீத அகவிலைப்படி உயர்வு

தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படியினை 14 சதவிகிதம் உயர்த்தி ஜனவரி 01, 2022 முதல் 17 சதவிகிதத்திலிருந்து 31 சதவிகிதமாக உயர்த்தி வழங்கிட கடந்த டிசம்பர் மாதம் 28ம் தேதியன்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆணையிட்டார்.

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 14 சதவீதம் அகவிலைப்படி உயர்வு அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

அகவிலைப்படி உயர்வு இம்மாதம் 1-ம் தேதி முதல் அமலுக்கு வருவதாகவும், திருத்தப்பட்ட ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்களுக்கும், குடும்ப ஓய்வூதியம் பெறுவோருக்கும் உயர்வு அளிக்கப்படும் என்றும் 2016ம் ஆண்டுக்கு முந்தைய விகிதத்தில் உள்ள அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு அளிக்கப்படும். என்றும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Exit mobile version