Site icon ழகரம்

ஹிஜாப் தடைக்கு எதிராக வழக்கு தொடுத்த பெண்ணின் சகோதரர் மீது தாக்குதல்

கர்நாடக மாநிலம் உடுப்பி பகுதியில், ஹிஜாப் தடைக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட ஒரு பெண்ணின் சகோதரர் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார். இதையடுத்து மீண்டும் பதற்றமான சூழல் தற்போது அங்கு நிலவி வருகிறது.

இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட பெண்ணின் தந்தை ஊடகத்தில் ஹிஜாப் அணிவது பற்றி பேசியுள்ளார்.

அதைக் கேள்விப்பட்டு சுமார் முப்பது முதல் நாற்பது நபர்கள் அந்தப் பெண்ணின் தந்தையின் உணவகத்திற்கு வந்து உள்ளனர். அப்போது அவர் தந்தை இல்லாததால் உணவகத்தில் இருந்த பெண்ணின் சகோதரர் சைஃபிடம் ஹிஜாப் விவகாரம் தொடர்பாக பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டதாக அந்தப் புகாரில் கூறப்படுகிறது.இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தில் அந்த பெண்ணின் சகோதரர் தாக்கப்பட்டார்.

இது குறித்து உடுப்பி காவல்துறை கண்காணிப்பாளர் என்.விஷ்ணுவர்தன் பிபிசி ஹிந்தியிடம், “முதல்கட்டமாக 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது”, என்று கூறினார். தற்போது பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

Exit mobile version