Site icon ழகரம்

வாகனங்கள் விபத்துக்குள்ளாகி உயிரிழப்போர் குடும்பத்துக்கு இழப்பீடு ரூ.2 லட்சமாக உயர்வு

மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் நேற்று முன்தினம் வெளியிட்ட அறிக்கையில்:

வாகன விபத்தில் சிக்கு வோருக்கு இழப்பீடு வழங்கு வதற்காக கடந்த 1989-ம் ஆண்டு அமல்படுத்தப்பட்ட திட்டம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கடந்த பிப்ரவரி 25-ம் தேதி வெளியிடப்பட்ட அறிவிக்கையின்படி, வாகன விபத்தில் உயிரிழப் போரின் குடும்பத்தினருக்கான இழப்பீடு ரூ.25 ஆயிரத்தில் இருந்து ரூ.2 லட்சமாக உயர்த்தப் படுகிறது. இதுபோல காயமடைந் தோருக்கான நிவாரணத் தொகை ரூ.12,500-லிருந்து ரூ.50 ஆயிரம் ஆக உயர்த்தப்படுகிறது. இது வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

மேலும் வாகன விபத்தில் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து இது தொடர்பாக பெறப்பட்ட விண்ணப்பங்களை பரிசீலித்து உரிய இழப்பீட்டை வழங்குவதற்கான காலவரையறையும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கடந்த 2020-ல் நாடு முழுவதும் 3 லட்சத்து 66 ஆயிரத்து 138 சாலை விபத்துகள் ஏற்பட்டதாகவும் இதில் 1 லட்சத்து 31 ஆயிரத்து 714 பேர் உயிரிழந்ததாகவும் அரசின் புள்ளிவிவரம் கூறுகிறது.

Exit mobile version