Site icon ழகரம்

ரஷ்ய தேசிய கொடிக்கும்,தேசிய கீதத்திற்கும் தடை:பிபா முடிவிற்கு ஐரோப்பிய நாடுகள் எதிர்ப்பு

உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்ததை அடுத்த சர்வதேச கால்பந்து கூட்டமைப்பான பிபா அமைப்பு ரஷ்ய தேசிய கோடிக்கும்,தேசிய கீதத்திற்கும் தடை என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

பிபா அமைப்பு உக்ரைன் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து ரஷ்யாவில் எந்த சர்வதேச போட்டிகள் நடதபடாடு என்றும்,வெளிநாட்டில் மடைபெரும் போட்டிகளுக்கு ரஷ்ய  தேசிய கொடிக்கும்,தேசிய கீதத்திற்கும் தடை விதிக்கபடுவதாக பிபா அறிவித்துள்ளது.இது முதல் கட்ட நடவடிக்கை என்றும் பிபா எசசரித்துள்ளது.மேலும் ரஷ்யா தேசிய அணியாக போட்டியிடாது,அதற்கு ரஷ்யா கால்பந்து அமைப்பாக போட்டியிடலாம் என்று பிபா அறிவித்துள்ளது.

பிபாவின் இந்த நடவடிக்கையை பல ஐரோப்பிய நாடுகள் விமர்சித்துள்ளன.பிபாவின் இந்த நடவடிக்கையை ஏற்று கொள்ள முடியாது என்று போலந்து கால்பந்து அமைப்பு கூறியுள்ளது.மேலும் நாங்கள்  ரஷ்யாவுடன் விளையாட முடியாது என்றும்,அது எந்த பெயரில் வந்தாலும் சரியே என்று போலந்து கால்பந்து அமைப்பின் தலைவர் சிஜாரி குலேச்சா கூறினார்.பிபாவின் எழுத்தளவில் உள்ள மனித உரிமை சட்டம் செயல்படுத்தப்பட வேண்டும் என்றும்,அதன்படி இந்த கத்தாரில் நடைபெறும் உலக கோப்பை கால்பந்து போட்டியில் ரஷ்யா வெளியேற்றப்பட வேண்டும் என்று கூறினார்.

இங்கிலாந்து,ஸ்வீடன் ,செக்குடியரசு போன்ற ஐரோப்பிய நாடுகளும் ரஷ்யாவுடன் விளையாட மறுத்துள்ளது.

Exit mobile version