உக்ரேன் மீதான ரஷ்ய படையெடுப்பின் ஐந்தாவது நாளில், இரு நாடுகளின் பிரதிநிதிகளும் படையெடுப்பை முடிவுக்குக் கொண்டு வரும் நோக்கில் அமைதிப் பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளனர்.
உக்ரேனிய அதிபரின் அலுவலகம், உடனடியாக போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டும் மற்றும் ரஷ்ய படைகளை திரும்பப் பெற வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
அமைதி பேச்சுவார்த்தைக்கு வருகை தந்துள்ள ரஷ்ய பிரதிநிதி விளாதிமிர் மெடின்ஸ்கி, இரு தரப்பும் ஏற்றுக் கொள்ளும் வகையில் ஒரு உடன்பாட்டை எட்ட விரும்புவதாக கூறினார்.
அமைதிப் பேச்சுவார்த்தை தொடங்குவதற்கு முன்பு, ரஷ்ய படைவீரர்கள் தங்கள் ஆயுதங்களை பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார் யுக்ரேனிய அதிபர் வொலோடிமிர் ஸெலன்ஸ்கி.
மேலும் ஐரோப்பிய ஒன்றியம் யுக்ரேனுக்கு உடனடியாக முகாமின் உறுப்புரிமையை வழங்குமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.