செய்திகள்உலகம்

யுக்ரேன்-ரஷ்யா போர்:இதுவரை நடந்தது என்ன?

  • யுக்ரேனின் டோன்பாஸ் பிராந்தியத்தில் ராணுவ நடவடிக்கையை தொடங்க ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உத்தரவிட்டார்.
  • “ரஷ்ய ராணுவத்தின் தூண்டுதலற்ற மற்றும் நியாயமற்ற தாக்குதல்” என்று ரஷ்யாவின் நடவடிக்கையை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார்.
  • கீஃப்வில் உள்ள பிபிசியின் செய்தியாளர் பால் ஆடம்ஸ், கீஃப்வில் ஐந்து முதல் ஆறு குண்டுவெடிப்புகள் கேட்டதாகத் தெரிவித்தார்.
  • யுக்ரேன் ஐ.நா தூதர் செர்ஜி கிஸ்லிட்யா, ரஷ்யாவின் ஐ.நா தூதர், யுக்ரேன் மீது போர் அறிவித்ததை “தனது அதிபர்” உறுதிபடுத்தியதாகத் தெரிவித்துள்ளார் என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
  • யுக்ரேன் வெளியுறவுத் துறை அமைச்சர், “புதின் யுக்ரேனில் முழு அளவிலான படையெடுப்பைத் தொடங்கியுள்ளார்,” என்று ட்வீட் செய்துள்ளார்.
  • அமெர்க்க அதிபர் ஜோ பைடன், யுக்ரேனிய அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியுடன் பேசியதாகவும் சர்வதேச கண்டனங்களைத் திரட்டுவதற்கு அவர் எடுக்கும் நடவடிக்கைகள் குறித்து தனக்கு விளக்கம் அளித்ததாகவும் கூறியுள்ளார்.
  • யுக்ரேனில் ஏவுகணைத் தாக்குதல்கள் நடந்தது பற்றிய செய்திகளை அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி உறுதி செய்ததாக ராய்டர்ஸ் செய்தி முகமை கூறுகிறது.
  • யுக்ரேன் அரசாங்கம்  சர்வதேச நாடுகளிடம் ஆயுதம் மற்றும் நிதி உதவியை கோரியுள்ளது .மேலும் ரஷ்யாவை தனிமைபடுத்த வேண்டுகோள் விடுத்துள்ளது.
  • அமெரிக்க அதிபர் ஜோ பைடன் போர் நடவடிக்கையை தொடங்கிய ரஷ்யாவை கண்டித்துள்ளார்.
  • ரஷ்ய போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக உக்ரேன் அறிவ்துள்ளது.
  • உக்ரேன் விமான படை தளத்தை நிர்மூலமாக்கிவிட்டதாக ரஷ்யாரிவிதுள்ளது.
  • போரின் எதிரொலியால் தங்கம்,மற்றும் கச்சா எண்ணெய் விலை ஏறியுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button