யுக்ரேனின் கெர்சன் நகரில் சண்டை நடந்துகொண்டிருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார் அந்நகர மேயர்.
தெற்கத்திய நகரமான கெர்சனை அமெரிக்கப் படையினர் பிடித்துவிட்டதாகத் தெரிவதாக ஏற்கெனவே குறிப்பிட்டிருந்தோம்.
ஆனால், இப்போது கெர்சனில் நிலைமை என்ன என்பது தெளிவாகத் தெரியவில்லை. தெருக்களில் ரஷ்யப் படையினர் இருப்பதாக உள்ளூர் செய்திகள் தெரிவிக்கின்றன.
நகரின் ரயில் நிலையத்தையும், துறைமுகத்தையும் செவ்வாய்க்கிழமை இரவு ரஷ்யப் படையினர் கைப்பற்றிவிட்டதாக நகர மேயர் கோலிகாயேவ் உள்ளூர் ரேடியோவில் பேசியதாக பிபிசி ரஷ்ய சேவை செய்தி வெளியிட்டது.
“சண்டை நடந்துகொண்டிருக்கிறது. நமது நகரின் மீதான ஆக்கிரமிப்பு நடந்துகொண்டிருக்கிறது,” என்று அவர் கூறியிருக்கிறார்.
மக்கள் வெளியேறவோ அல்லது பாதுகாப்பான இடங்களுக்கு செல்லவோ படையினர், பொதுமக்கள், அரசு அதிகாரிகள் முயற்சி செய்துவருவதாக அவர் தெரிவித்துள்ளார்.