உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கைக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உத்தரவு பிறப்பித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
போர் மூண்டுவிடக்கூடது ன உலக நாடுகள் பலவும் சமரசம் பேசி வந்தன. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் ஒரே வாரத்தில் இரண்டு முறை கூடி ஆலோசனை நடத்தியுள்ளது. சற்று முன்னர் ஐ.நா பொதுச் செயலாளர் அந்தோனியோ குத்ரேஸ்,உக்ரைன் மீது தாக்குதல் நடத்தும் திட்டத்தை ரஷ்யா கைவிட வேண்டும் என வேண்டுகோள் விடுத்திருந்தார்.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் நடந்து கொண்டிருக்கும் வேளையிலேயே ரஷ்ய அதிபர் புதின்,உக்ரைன் மீதான ராணுவ நடவடிக்கைக்கு உத்தரவிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக ரஷ்ய மக்களுக்காக தொலைக்காட்சியில் அதிபர் புதின் ஆற்றிய உரையில் நான் உக்ரைனுக்கு எதிராக ராணுவ நடவடிக்கை மேற்கொள்ள முடிவு செய்துள்ளேன் என்றார். மேலும்,உக்ரைன் தனது ஆயுதங்களை கீழே போடவேண்டும். இல்லாவிட்டால் பதிலடி கொடுக்க ரஷ்யா தயங்காது என்று கூறினார்.
அதேபோல், நேற்று உக்ரைன் அதிபர் வோளோடிமிர் ஜெலன்ஸ்கி பேசுகையில், ரஷ்யா விரைவில் ஐரோப்பாவின் மிகப்பெரிய போரை தொடங்கவுள்ளது என்று கூறியிருந்தார். மேலும் நாட்டில் போர் பதற்றம் நிலவுவதால் அவசர நிலையை பிரகடனம் செய்வதாக அறிவித்தார். டொனஸ்க் மற்றும் லஹான்ஸ் மாகாணங்களை தவிர்த்து இந்த உத்தரவு நாடு முழுவதற்கு பொருந்தும் என்றும் இந்த உத்தரவு 30 நாட்கள் அமலில் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும் போரை நிறுத்தும் வலிமை ரஷ்ய மக்களுக்குத்தான் உள்ளது எனக் கூறி உருக்கமாக வேண்டுகோள் விடுத்தார்.