Site icon ழகரம்

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஜாமீன் மனு தள்ளுபடி

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்ற நாளில் திமுக பிரமுகர் நரேஷ் என்பவரை கள்ள ஓட்டு போட்டதாகக் கூறி தாக்கியதாக கைதுசெய்யப்பட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ராயபுரத்தில் சாலை மறியலில் ஈடுபட்டது தொடர்பான 2-வது வழக்கில் மீண்டும் கைது செய்யப்பட்டார்.

முன்னதாக நேற்று முன்தினம் இரவு நேரத்தில் கைது செய்யப்பட்ட ஜெயக்குமார், ஜார்ஜ்டவுன் 15-வது குற்றவியல் நீதிமன்ற மாஜிஸ்திரேட் முரளி கிருஷ்ணா முன்பு ஆஜர்படுத்தப்பட்டிருந்தார். அதில் வருகிற மார்ச் 7-ஆம் தேதி வரை ஜெயக்குமாரை நீதிமன்ற காவலில் அடைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டதன் அடிப்படையில் பூந்தமல்லி கிளை சிறையில் அவர் அடைக்கப்பட்டார்.

பூந்தமல்லி கிளைச்சிறையிலுள்ள அவரது ஜாமீன் மனு இன்று விசாரணைக்கு வந்தபோது, இன்று காலை இதுகுறித்து இருதரப்பு விசாரணை நடத்தப்பட்டது. தற்போது ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் அவர்மீது மொத்தம் 12 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்மீதான மற்றொரு வழக்கிலும் மார்ச் 9-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் அறிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version