“யுக்ரேனில் உள்ள சுமியில் உள்ள இந்திய மாணவர்களைப் பற்றி நாங்கள் மிகவும் கவலை கொண்டுள்ளோம். நம் மாணவர்களுக்காகப் பாதுகாப்பான வழித்தடத்தை உருவாக்க உடனடி போர் நிறுத்தத்திற்குப் பல வழிகள் மூலம் ரஷ்ய மற்றும் யுக்ரேனிய அரசாங்களுக்குக் கடுமையாக அழுத்தம் கொடுத்துள்ளோம்,” என்று இந்திய வெளியுறவுத் துறையின் அதிகாரப்பூர்வ செய்தி தொடர்பாளர், அரிந்தம் பக்சி தெரிவித்துள்ளார்.