Site icon ழகரம்

இசுலாமியர்களின் ஓட்டுரிமையை பறிக்க வேண்டும்: பா.ஜ.க. எம்.எல்.ஏ. சர்ச்சை பேச்சு

பீகார் பா.ஜ.க. எம்எல்ஏ ஹரிபூசன் தாகூர் இசுலாமியர்களுக்கு வழங்கப்பட்ட ஓட்டுரிமையை பறிக்க வேண்டும் என்று சர்ச்சையை கிளப்பியுள்ளார்.மேலும் அவர் “1947 இசுலாமியர்களுக்கு பாகிஸ்தான் என்ற தனி நாடு பிரித்து கொடுக்கப்பட்டது.அதனால் முஸ்லிம்கள் பாகிஸ்தானிற்கு செல்ல வேண்டும் என்றும் ,அவர்கள் இந்தியாவில் இருக்க விரும்பினால் இரண்டாம் தர குடிமக்களாக இருக்க வேண்டும்.மேலும்,இசுலாமியர்களுக்கு வழங்கப்படும் ஓட்டுரிமை பறிக்கப்பட வேண்டும் என்றார். எம்எல்ஏ ஹரிபூசன் தாகூர் இது போன்ற வெறுப்பு பேச்சுகளுக்கு பெயர் போனவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பீகார் மாநில பா.ஜ.க. அவருடைய இந்த வெறுப்பு பேச்சுக்கு விளக்கம் கேட்டு அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.மேலும் அவருடைய கருத்துக்கும் கட்சிக்கும் தொடர்பில்லை என்று பீகார் மாநில பா.ஜ.க. தலைவர் சஞ்சய் ஜெய்ஸ்வால் கூறியுள்ளார்.

பா.ஜ.க. கூட்டணி கட்சியான ஐக்கிய ஜனதா தள கட்சியின் செய்தி தொடர்பாளர் நீரஜ் குமார் இதனை மோசமான வெறுப்பு பேச்சு என்றார்.மேலும் அவர் பா.ஜ.க எம்.எல்.ஏ. தாகூர்க்கு இந்திய குடியுரிமை குறித்து எந்த புரிதலும் இல்லை என்றார்.இதனால் அவருக்கு எந்த அரசியல் பலனும் கிடைக்க போவதில்லை என்றும்,வெறுமனே ஊடக வெளிச்சத்திற்காக இவ்வாறு பேசுகிறார் என்று கூறினார்.

Exit mobile version