செய்திகள்இந்தியாதமிழ்நாடு

பேரறிவாளனுக்கு பிணை வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவு

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளனுக்கு உச்ச நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.முப்பது ஆண்டுகளுக்கு பிறகு உச்சநீதிமன்றம்  பேரறிவாளனுக்கு பிணை வழங்குவது இதுவே முதல்முறை.

விடுதலை கோரி பேரறிவாளன் தாக்கல் செய்த மனு மீது விசாரணையில் உச்சநீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.கடந்த முப்பது ஆண்டுகளாக பேரறிவாளன் சிறை தண்டனை அனுபவித்து வருகிறார்.அவர் தற்போது பரோலில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.அவருடைய விடுதலையை நோக்கி காத்திருந்தவர்கள் அனைவருக்கும் இவ்வுத்தரவு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button