Site icon ழகரம்

பேரணி நடத்த தடை: காவல் ஆணையர் சங்கர் ஜிவால்

கோவை கார் சிலிண்டர் வெடிப்பு எதிரொலியாகத் தமிழகம் முழுவதும் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு முடுக்கிவிடப்பட்டுள்ளது. விசாரணையை என்ஐஏ பிரிவுக்கு மாற்றியுள்ள நிலையில் உளவுப் பிரிவு போலீஸாரும் ரகசிய கண்காணிப்பை முடுக்கிவிட்டுள்ளனர்.

இது ஒருபுறம் இருக்க ஒவ்வொரு மாவட்ட போலீஸாரும் தங்கள் மாவட்டங்களுக்குத் தகுந்தவாறு பாதுகாப்பு வியூகங்களை வகுத்துள்ளனர். அதன்படி, சென்னையிலும் பாதுகாப்பு, கண்காணிப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் நேற்று பிறப்பித்த உத்தரவில், “சென்னையில் பேரணிகள், ஆர்ப்பாட்டங்கள் நடத்த 15 நாட்களுக்குத் தடை விதிக்கப்படுகிறது. இந்த தடை உத்தரவு 30.10.2022 முதல்அடுத்த மாதம் 14-ம் தேதி இரவு 11 மணி வரை அமலில் இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

Exit mobile version