ஈரோடு மாவட்டம் பவானிசாகர் பேரூராட்சி 11வது வார்டில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் நரேந்திரன் ஒரே ஒரு ஓட்டு பெற்றுள்ளார். பாஜக வேட்பாளர் நரேந்திரனுக்கு அவரது குடும்பத்தினரோ, நண்பர்களோ கூட வாக்களிக்காததால் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளார். பாஜக இவ்வாறு ஒத்த ஓட்டு வாங்குவது இதுவே முதன்முறை அல்ல. கடந்த ஆண்டு நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலிலும் கோவை மாவட்டம் குருடம்பாளையம் ஊராட்சி 9வது வார்டில் போட்டியிட்ட பாஜகவை சேர்ந்த கார்த்திக் வாக்கு எண்ணிக்கை முடிவில் ஒரு வாக்கு மட்டுமே பெற்றார் என்பது நினைகூறத்தக்கது.