Site icon ழகரம்

நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்துக்கு 3 மாத கால நீட்டிப்பு: தமிழக அரசு உத்தரவு

தூத்துக்குடியில் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி பொதுமக்கள் பலர் தன்னிச்சை போராட்டம் நடத்தினர். அச்சமயம் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பொதுமக்கள் மீது போலீசார் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு, தடியடி நடத்தியதில் 13 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இதுகுறித்து விசாரணை நடத்துவதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டது. கடந்த 2018ம் ஆண்டு ஜூன் மாதம் 9ம் தேதி இந்த ஆணையம் தனது விசாரணையை துவங்கியது. தொடர்ந்து சாட்சிகளின் விசாரணை கிட்டத்தட்ட 3 ஆண்டுகளாக மேலாக நீடித்து  36வது கட்ட விசாரணை கடந்த 18ம் தேதியோடு நிறைவடைந்தது. இதுவரை 1,048 சாட்சிகளிடம் விசாரணை நடத்தியதுடன், 1,544 ஆவணங்களையும் குறியீடு செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே ஒரு நபர் ஆணையம் இடைக்கால அறிக்கை ஒன்றை 2 மாதங்களுக்கு முன்பு அரசிடம் சமர்ப்பித்தது. இந்நிலையில், நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்துக்கு 3 மாத கால நீட்டிப்பு வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஆகஸ்ட் 23ல் அருணா ஜெகதீசன் குழுவுக்கு தரப்பட்ட 6 மாத கால நீட்டிப்பு நேற்றுடன் முடிவடைந்த நிலையில் மேலும் 3 மாதம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

Exit mobile version