தமிழகத்தில் கடந்த 19-ம் தேதி அன்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது.தேர்தல் முடிவுகள் இன்று (22-2-2022) காலை முதல் வெளியாகி கொண்டிருக்கிறது.இதில் ஆளும் கட்சியான தி.மு.க. பெரும்பாலான இடங்கலில் வெற்றி பெற்று கைப்பற்றியது.இந்த தேர்தலில் போட்டியிட்ட இலம்தளிமுரையினரில் பலரும் வெற்றி பெற்றுள்ளனர்.தேர்தலில் 22 வயது கல்லூரி மாணவி, பொறியியல் பட்டதாரி, 4000 வாக்குகள் வித்தியாசத்தில் வென்ற இளம் வேட்பாளர் என பலரும் வெற்றி வாகை சூடியுள்ளனர். அதன் விவரம் பின்வருமாறு;
21 வயது இளம் வேட்பாளர் வெற்றி:
ஆரணியில் திமுகவை சேர்ந்த 21 வயது இளம் வேட்பாளர் வேட்பாளர் ரேவதி வெற்றி பெற்றார்.
22 வயது சட்ட கல்லூரி மாணவி வெற்றி
ஓசூர் மாநகராட்சி 13வது வார்டில் திமுக வேட்பாளராக களமிறங்கிய சட்டக் கல்லூரி 3ம் ஆண்டு மாணவி யஷாஸ்வினி (22) வெற்றி பெற்றார். 1146 வாக்குகள் பெற்ற யஷாஸ்வினி, 640 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளரை வீழ்த்தியுள்ளார்.
பொறியியல் பட்டதாரி மாணவி வெற்றி:
திருச்சி மாவட்டம் துவாக்குடி நகராட்சி 5வது வார்டில் சுயேட்சை வேட்பாளராக களமிறங்கிய 22 வயது பொறியியல் பட்டதாரி சினேகா வெற்றி பெற்றார்.
கவுன்சிலராக 22 வயது இளம்பெண்:
சென்னை கோடம்பாக்கம் மண்டலத்தில் உள்ள 136வது வார்டில் 22 வயது இளம்பெண் நிலவரசி துரைராஜ் வெற்றிபெற்றார்.
4000 வாக்குகள் வித்தியாசத்தில் வென்ற இளம் வேட்பாளர்:
சென்னை மாநகராட்சி 99வது வார்டில் திமுக வேட்பாளர் பரிதி இளம்சுருதி, 4000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். அதிமுக வேட்பாளராக களமிறங்கிய முன்னாள் ஐஏஎஸ் சிவகாமியை வீழ்த்தி பரிதி இளம்வழுதியின் மகன் பரிதி இளம்சுருதி வெற்றிபெற்றார்.