Site icon ழகரம்

தமிழக முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் எப்படி எடுத்துக்கொள்வது ?

CMCHISTN:  Chief Minister Comprehensive Health Insurance Scheme TamilNadu

கொரோனா  அலை  பெரிய அச்சத்தை ஏற்படுத்தி விட்டது. நமது வீட்டில் ஒருவர், உறவினர்கள் நண்பர்கள் என நமது தெரிந்தவர் ஒருவர் இந்த கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வந்து இருப்பார்கள். இதில் இறப்பு எண்ணிக்கையும் அதிகமாக  இருந்தது.இரண்டாம் அலை குறைந்து வரும் என்ற நம்பிக்கையில் இருந்தாலும், அடுத்த மூன்றாம் அலை  எச்சரிக்கை தொடர்ந்து வந்து கொண்டு இருக்கிறது.

 

மூன்றாவது அலையில் இருந்து  தங்களை காத்து கொள்ள  தடுப்பூசி தான் நம்மிடம் இருக்கும் ஒரு ஆயுதம் என முதலமைச்சர் மு க   ஸ்டாலின் அவர்கள் தனி வீடியோவாக வெளியிட்டு விழிப்புணர்ச்சி ஏற்படுத்தி வருகிறார். தனி மனித இடைவெளி, முறையாக முகக்கவசம் அணிதல், அவ்வப்போது கைகளை சுத்தமாக கழுவுதல், மற்றும் தடுப்பூசி போன்ற அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் அவசியம்.

இது வரை முதலமைச்சர் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் சேராமல் இருந்தால், கண்டிப்பாக சேர்ந்து கொள்ளுங்கள். இந்த திட்டத்தில் சேர்வதற்கு வழிமுறைகள்

இத்திட்டத்தில் சேர்வதற்கான விண்ணப்ப படிவத்தினை பூர்த்தி செய்து  கிராம நிர்வாக அலுவலர் (VAO) அலுவலகத்தில் சென்று  கிராம நிர்வாக அலுவலர் (VAO) அவர்களிடம் சென்று கையெழுத்து  வாங்கி,மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமர்ப்பிக்கவும். அங்கு  காப்பீட்டுத் திட்டத்தில் இணைய விரும்புவர்களை புகைப்படம் எடுத்துக் கொண்டு, பதிவு எண்ணை கொடுப்பார்கள். பின்னர் ஓரிரு தினங்களில் மருத்துவ காப்பீடு அட்டை வீடு வந்து சேரும்.

அட்டை வீட்டிற்கு வர வில்லை என்றாலும் கவலை இல்லை. பதிவு எண்ணை வைத்து இலவச  சிகிச்சை எடுத்து கொள்ளலாம்.

.

தமிழ்நாட்டில் இருக்கும் ஏழை எளிய  மக்களும், கிராமத்தில் வசிக்கும் ஒவ்வொருவருக்கும் தேவையான நவீன மருத்துவ வசதிகளை அனைவர்க்கும் கொடுப்பதில், தமிழக அரசு மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது.  அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் மூலம் இலவச சிகிச்சை அளிப்பதே இந்த முதலமைச்சர் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம் ஆகும்.

பச்சிளம் குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை  அனைவருக்கும் தேவையான மருத்துவ வசதிகள் எடுத்து கொள்ளலாம். தற்போது இந்த கொரோனா சிகிச்சையும் இந்த திட்டத்தின் கீழ் எடுத்து கொள்ளலாம். இது வரை இத்திட்டத்தில் சேராதவர்கள் இருந்தால் உடனடியாக சேர்ந்து கொள்ளுங்கள்.

Exit mobile version