கோவை மாநகராட்சியில் அதிமுக மேயர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த கிருபாலினி உள்ளாட்சித் தேர்தலில் தோல்வி அடைந்துள்ளார். கோவை மாநகராட்சி 7வது வார்டில் திமுக வேட்பாளர் கோவிந்தராஜ் வெற்றிபெற்றார். கோவை மாநகராட்சியை பொறுத்தமட்டில் மொத்தம் 100 வார்டுகள் உள்ளன. இதில் 778 வேட்பாளர் போட்டியிட்டனர். மொத்தமுள்ள 15 லட்சத்து 65 ஆயிரத்து 158 வாக்காளர்களில், 8 லட்சத்து 39 ஆயிரத்து 109 பேர் வாக்களித்தனர். பெரும்பான்மையான இடங்களில் திமுக கூட்டணியே வெற்றி வாகை சூடி வருகிறது. கோவை மாநகராட்சியில் இதுவரை திமுக கூட்டணி 8 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.