கடந்த 21 வருடங்களாக சென்னை கண்ணப்பர் திடல் பகுதியில் 128 குடும்பங்கள், தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
சரியாக 21 வருடங்களுக்கு முன்பு ஆசிய தடகள போட்டி சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடத்தப்பட்டது. அந்த போட்டியை பார்க்க வந்த அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவின் பார்வையில் மக்கள் தெரிவார்கள் என்ற ஒரே காரணத்திற்காக, சாலையோரத்தில் தங்கியிருந்த 60 குடும்பங்கள், சூழை பகுதியில் இருந்த இரவு நேர கூடாரத்திற்கு மாற்றப்பட்டது.
மக்கள் மாற்றப்பட்டபோது, மூன்று நாட்களில் வீடுகள் வழங்கப்படும் என்று வாக்குறுதி வழங்கப்பட்டது. தற்போதுவரை அவர்களுக்கு வீடுகள் வழங்கப்படவில்லை. 60 குடும்பங்கள் விரிவடைந்து தற்போது 128 குடும்பங்களாக மாறியுள்ளது.
தற்போதைய திமுக ஆட்சியில் தங்களுக்கு வீடுகள் கிடைக்கும் என்று நம்பியிருந்த மக்கள், எம்.எல்.ஏ பரந்தாமனை சென்று சந்தித்துள்ளனர். இது பற்றி, கூடாரத்தில் வசிக்கும் செல்வம் குறிப்பிடுகையில், “எங்கள் பகுதி மக்கள் எம்எல்ஏ-வை பார்க்க சென்றபோது, வீடியோ எடுத்தனர். அதை கண்டு கோபமடைந்த அவர், எங்கள் மக்கள் வைத்திருந்த செல்போனை வாங்கி உடைத்துவிட்டார்” என்று தெரிவித்தார்.
இந்த பிரச்சனை பற்றிய முழு வீடியோவை பார்க்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.