ரஷ்ய படைகள் யுக்ரேன் தலைநகர் கீயவ் மீது முழுவீச்சில் தாக்குதல் நடத்த தயாராகி வருவதாக யுக்ரேன் கூறியுள்ளது.
ரஷ்யப் படைகள் கீயவ் நகரத்தின் மீதான தாக்குதலுக்கான பொருட்களை சேகரிக்கத் தொடங்கியுள்ளதாகவும்,
டாங்கர்கள் மற்றும் மோட்டார் பொருத்தப்பட்ட படை பிரிவுகள் மூலம் கீயவ் நகரின் இர்பின் பகுதியை நோக்கி முன்னேறி வருவதாகவும் யுக்ரேன் ராணுவத் தளபதி கூறியுள்ளார்.
ரஷ்ய ராணுவ கமாண்டர்கள் எரிபொருளை கப்பல் மூலம் தங்கள் படைகளுக்கு, பெலாரூஸிலிருந்து செர்னோபிள் விலக்கு மண்டலம் வழியாக அனுப்பி வருகின்றனர் என்றும்.
கிழக்கு நகரங்களான கார்ஹிவ், செர்னிஹிவ், சுமி மற்றும் தெற்கு நகரமான மைகோலாயிவ் ஆகிய பகுதிகளை ரஷ்ய ராணுவம் சுற்றி வளைப்பதில் கவனம் செலுத்தி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.