Site icon ழகரம்

கார்கிவ் ரயில் நிலையத்தில் பணயக் கைதிகளாக இந்திய மாணவர்கள் உட்பட வெளிநாட்டவர் சிறைபிடிப்பு: புதின்

கார்கிவ் ரயில் நிலையத்தில் இந்திய மாணவர்களை பணயக் கைதிகளாக உக்ரைன் அரசு பிடித்து வைத்திருப்பதாக ரஷ்யஅதிபர் புதின் தெரிவித்துள்ளார்.

ஏற்கெனவே ரஷ்ய ஊடகங்கள் இதுபோன்ற செய்தியை வெளியிட்ட போது இந்திய வெளியுறவு அமைச்சகம் அதனை மறுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. தற்போது ரஷ்ய அதிபரே தொலைக்காட்சியில் உரையாற்றியபோது, இந்திய மாணவர்கள் உட்பட வெளிநாட்டவரை உக்ரைன் பணயக் கைதிகளாக பிடித்துவைத்துள்ளது எனக் கூறியுள்ளார்.

ரஷ்ய பாதுகாப்புக் கவுன்சில் கூட்டத்தில் நேற்று மாலை பேசிய அதிபர் புதின், “உக்ரைனில் கல்வி கற்கச் சென்ற வெளிநாட்டு மாணவர்களை அந்நாடு பணயக் கைதிகளாக சிறைப்பிடித்து வைத்துள்ளது. கார்கிவ் ரயில் நிலையத்தில் 3,179 இந்திய மாணவர்கள் உட்பட பல வெளிநாட்டவரும் ஒரு நாளுக்கும் மேலாக பிடித்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இன்னமும் அங்கு தான் இருக்கின்றனர். உக்ரைனின் சுமி நகரில் 576 பேர் சிக்கியுள்ளனர். கார்கிவிலிருந்து வெளியேற விரும்பிய சீன நாட்டவர் மீது உக்ரைன் படைகள் சுட்டுக் காயப்படுத்தியுள்ளன. இருவர் காயமடைந்துள்ளனர். வெளிநாட்டவரை பணயக் கைதிகளாகப் பிடித்துவைப்பதைத் தொடங்கியுள்ளனர்” என்று கூறியுள்ளார்.

Exit mobile version