அணு ஆயுத தடுப்புப் படைகளை தயார் நிலையில் வைத்திருக்குமாறு ரஷ்ய படையினருக்கு அதிபர் புடின் உத்தரவிட்டுள்ள நிலையில் எந்தெந்த நாடுகளில் எவ்வளவு அணு ஆயுதங்கள் உள்ளன என்ற விவரங்களை பார்க்கலாம்
அமெரிக்க விஞ்ஞானிகள் கூட்டமைப்பு அணு ஆயுதங்கள் தொடர்பான புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில், உக்ரைனில் தற்போது தாக்குதல் நடத்திவரும் ரஷ்யா 5,977 அணு ஆயுதங்களுடன் முதலிடத்தில் உள்ளது. 2வது இடத்திலுள்ள அமெரிக்கா 5,428 அணு ஆயுதங்களை வைத்திருக்கிறது. சீனாவிடம் 350, ஃபிரான்சிடம் 290, பிரிட்டனிடம் 225 அணு ஆயுதங்கள் உள்ளதாக அமெரிக்க விஞ்ஞானிகள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
165 அணு ஆயுதங்களுடன் பாகிஸ்தான் 5ஆவது இடமும் 160 அணு ஆயுதங்களுடன் இந்தியா 6ஆவது இடமும் வகிக்கின்றன. இஸ்ரேலிடம் 90, வடகொரியாவிடம் 20 அணு ஆயுதங்கள் உள்ளதாக அமெரிக்க அமைப்பு கூறியுள்ளது. வெளியே கசிந்த தகவல்கள் அடிப்படையிலேயே இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டிருக்கக்கூடும் என்றும் சில நாடுகளில் கூடுதலாகவே அணு ஆயுதங்கள் இருக்கக்கூடும் எனவும் கூறப்படுகிறது.