அரசு மருத்துவர்களுக்கான சட்டப் போராட்டக் குழு தலைவர் மருத்துவர் எஸ்.பெருமாள் பிள்ளை வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகத்தில் கரோனா தொற்றால் உயிரிழந்த அரசு மருத்துவர்களின் குடும்பத்தினருக்கு மாநில அரசிடமிருந்து நிவாரணம் எதுவுமே தரப்படவில்லை என்பது வருத்தம் அளிக்கிறது. மருத்துவர் விவேகானந்தன் உயிரிழந்து ஓராண்டுக்கு பிறகும், அவரது மனைவிக்கு அரசு வேலை தரப்படவில்லை. தமிழகத்தில் புதிய ஆட்சி அமைந்ததும் அரசு மருத்துவர்களின் ஊதியக் கோரிக்கை உடனடியாக நிறைவேற்றப்படும் என்று ஏக்கத்தோடும், எதிர்பார்ப்போடும் காத்திருந்தோம். இருப்பினும் ஆட்சி அமைந்து 10 மாதங்களுக்கு பிறகும், அரசு மருத்துவர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை என்றவலியும், வேதனையும் ஒவ்வொரு மருத்துவரிடமும் அதிகமாகவே இருக்கிறது. கருணாநிதி முதல்வராக இருந்தபோது போடப்பட்ட அரசாணை354-ன்படி ஊதிய உயர்வை வழங்க முதல்வரை வேண்டுகிறோம். இந்த கோரிக்கைகளைவலியுறுத்தி இன்று சென்னை அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் அரசு மருத்துவர்கள் ஒருநாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுகிறோம்.
இவ்வாறு அவர் தெரிவித்துஉள்ளார்.