Site icon ழகரம்

உக்ரைன் அதிபருடன் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பேச்சுவார்த்தை

ரஷ்யா போர் தொடங்கியுள்ள நிலையில் உக்ரைன் அதிபருடன் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பேசி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைன் நாட்டில் தாக்குதல் நடத்தும் ரஷ்யாவுக்கு  அதிபர் ஜோ பைடன் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். மேலும் உக்ரைன் விவகாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்க ஜி 7 நாடுகளின் அவசர கூட்டத்திற்கு அமெரிக்க அழைப்பு விடுத்துள்ளது.மேலும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ரஷ்யாவிற்கு கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளார்.உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போரால் பேரழிவு ஏற்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.ரஷ்யாவின் நடவடிக்கையால் ஏற்படும் உயிரிழப்புகளுக்கு ரஷ்யா தான் பொறுப்பு என்றும் ஜோ பைடன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Exit mobile version