Site icon ழகரம்

உக்ரைனுக்கு ஆயுதங்களை வாரி வழங்கும் ஐரோப்பிய நாடுகள்..!!

உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பை எதிர்க்க ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு ஆயுதங்களை வாரி வழங்குகின்றன. உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பை நிறுத்துமாறு நெதர்லாந்து மற்றும் அதன் நட்பு நாடுகளுக்கு டச்சு பிரதம மந்திரி அழைப்பு விடுத்தார். திங்களன்று பாராளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தின் போது பேசிய அவர், உக்ரைனின் எதிர்ப்பை வலுப்படுத்த நாட்டின் ராணுவம் தற்காப்பு ஆயுதங்களை வழங்கியதாக தெரிவித்தார். ஏற்கனவே சனிக்கிழமையன்று டச்சு ராணுவம், ஒரு போக்குவரத்து விமானத்தில் ஏற்றப்படும் ராக்கெட்டுகள் என்று குறிக்கப்பட்ட பலகைகளின் வீடியோ காட்சிகளை வெளியிட்டது.

அதேநாளில் நெதர்லாந்து, உக்ரேனிய ராணுவத்திற்கு 200 ஸ்டிங்கர் வான் பாதுகாப்பு ராக்கெட்டுகள் மற்றும் 50 பிளான்சர் பிளாஸ்ட் 3 டாங்கிகளை எதிர்ப்பு ஆயுதங்களை 400 ராக்கெட்டுகளுடன் வழங்கியதாக கூறியுள்ளது. ஏற்கனவே அமெரிக்கா தலைமையிலான நேட்டோ நாடுகள் உக்ரைனுக்கு ஏராளமான ஆயுதங்களை வழங்கியுள்ளன.

இந்த நிலையில் டச்சு, நெதர்லாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளும் உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்கி வருவதால் ரஷ்யா, உக்ரைன் இடையிலான போர் மேலும் அபாயகரமான கட்டத்தை எட்டியிருக்கிறது. உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்கும் நேட்டோவின் முடிவு மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என ரஷ்யா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஐரோப்பிய யூனியன் தங்களுக்கு விரோதமாக செயல்படுவதாகவும் ரஷ்யா தெரிவித்துள்ளது.

Exit mobile version