செய்திகள்உலகம்தமிழ்நாடு

உக்ரைனின் உள்ள தமிழர்களை மீட்க நடவடிக்கை!: அவசர உதவி எண்கள் அறிவிப்பு

உக்ரைனின் உள்ள தமிழர்களை மீட்க அயலக தமிழர் நலன் மற்றும் நல்வாழ்வுத்துறை ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது. உக்ரைனின் உள்ள தமிழர்கள் 044-28515288, 9600023645, 9940256444 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. www.nrtamils.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக உதவி கோரலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. உக்ரைனில் உள்ள பல நகரங்கள் மீது ரஷ்ய படைகள் குண்டுகள் வீசி வருகின்றன. ஒடேசா, கார்கிவ், கீவ், மரியுபோல் ஆகிய நகரங்கள் மீது ரஷ்ய ராணுவம் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தி வருகின்றன.

உக்ரைனின் ஒடேசா துறைமுகத்தில் ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தியதில் குண்டுகள் வெடித்தன. உக்ரைன் எல்லையில் 2 லட்சம் வீரர்களை குவித்து ரஷ்ய ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைன் மீது போர் தொடுத்த ரஷ்யாவை உலக நாடுகள் தடுத்து நிறுத்த வேண்டும் என்று உக்ரைன் வெளியுறவு அமைச்சர் தெரிவித்திருக்கிறார். உக்ரைனில் அமைதியான நகரங்கள் மீது ரஷ்யா தாக்குதல் நடத்துவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

உக்ரைன் மீது ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்துவதற்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதனிடையே, உக்ரைன் தலைநகர் கீவ் நகருக்கு சென்றுள்ள ஏர் இந்தியா விமானம் நடுவழியில் தவித்து வருகிறது. இந்நிலையில் உக்ரைனின் உள்ள தமிழர்களை மீட்க அயலக தமிழர் நலன் மற்றும் நல்வாழ்வுத்துறை ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button