யுக்ரேனின் கார்கிவ் நகரில் இன்று காலை வெடிகுண்டு தாக்குதலில், இந்திய மாணவர் ஒருவர் உயிரிழந்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது சம்பந்தமாக வெளியுறவுத் துறை அமைச்சகம் ட்வீட் செய்துள்ளது.
கார்கிவ் மற்றும் பிற நகரங்களில் இன்னும் சிக்கியிருக்கும் இந்திய குடிமக்கள், அவசரமாகவும் பாதுகாப்பாகவும் வெளியேறும் பாதையை உறுதிப்படுத்துமாறு கேட்டுக் கொள்ள டெல்லியில் உள்ள ரஷ்யா மற்றும் யுக்ரேனிய நாடுகளின் தூதர்களை இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா அழைத்திருக்கிறார்.
இதேபோன்ற நடவடிக்கையை ரஷ்யா மற்றும் யுக்ரேனில் உள்ள இந்திய தூதர்களும் அந்தந்த நாட்டு அரசுகளிடம் வலியுறுத்த கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.