கார்கிவ் மற்றும் கிழக்கு யுக்ரேனின் பிற பகுதிகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்கும் விஷயத்தில் நாங்கள் இந்திய அதிகாரிகளுடன் தொடர்பில் இருக்கிறோம் என்று இந்தியாவுக்கான ரஷ்ய தூதர் டெனிஸ் அலிபோவ் தெரிவித்துள்ளார்.
ரஷ்யா ஆக்கிரமித்துள்ள யுக்ரேனிய பகுதியில் சிக்கியுள்ள அனைவரையும் அவசர அவசரமாக வெளியேற்றுவதற்கான இந்தியாவின் கோரிக்கைகள் கிடைக்கப் பெற்றதை அடுத்து இதை இந்தியாவுக்கான ரஷ்ய தூதர் தெரிவித்துள்ளதாக ஏ.என்.ஐ செய்தி முகமை ட்வீட் செய்துள்ளது.